’அர்ஜுன் ரெட்டி’ நாயகியின் இரண்டாவது தமிழ் படம்!

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘மகாநதி’யில் நடிக்கும் ’அர்ஜுன் ரெட்டி’ கதாநாயகி!

செய்திகள் 12-Oct-2017 10:29 AM IST VRC கருத்துக்கள்

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் கோலோச்சிய நடிகை சாவித்திரி. இவரது வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது என்றும் இந்த படத்தில் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான், சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், மற்றும் பிரகாஷ் ராஜ், சமந்தா ஆகியோரும் நடிக்கிறார்கள் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படம் குறித்து லேட்டஸ்டாக கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ கதாநாயகி ஷாலினி பாண்டேயும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷுடன் ’100% காதல்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ’ஷாலினி பாண்டே’யின் இரண்டாவது தமிழ் படம் ‘மகாநதி’ என்பது குறிப்பிடத்தக்கது.

#ShaliniPandey #ArjunReddy #Mahanadhi #DulquerSalman #KeerthySuresh #Ashwin

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்டங்கரன் வீடியோ பாடல் - Sarkar


;