டாக்டர் ஆகிறார் த்ரிஷா!

அறிமுக இயக்குனர் திருஞானம் இயக்கும் ‘பரமபதம்’ படத்தில் டாக்டராக நடிக்கிறார் த்ரிஷா!

செய்திகள் 11-Oct-2017 4:21 PM IST VRC கருத்துக்கள்

த்ரிஷா நடித்து முடித்துள்ள படங்கள் ‘சதுரங்கவேட்டை, ‘கர்ஜனை’, ‘மோகினி’ மலையாள ‘ரெடி ஜூட்’ முதலானவை. இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவிருக்கும் நிலையில் இப்போது த்ரிஷா நடித்து வரும் மற்றொரு படம் ‘96’. விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பும் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து அறிமுக இயக்குனர் திருஞானம் இயக்கி, தயாரிக்கும் ‘பரமபதம்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. இந்த படத்தில் த்ரிஷாவுக்கு டாக்டர் வேடமாம். ஏற்கெனவே ‘சர்வம்’ படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்திருக்கும் த்ரிஷா அந்த படத்தை தொடர்ந்து ‘பரமபதம்’ படத்தில் மீண்டும் டாக்டர் வேடமேற்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது. இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 20-ஆம் தேதிக்கு மேல் துவங்கவிருக்கிறது. இது த்ரிஷா தரப்பிலிருந்து நமக்கு கிடைத்த அதிகாரபூர்வமான தகவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#Trisha #Paramapadham #Thiruganam #SathurangaVettai2 #Garjanai #Mohini

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

96 பட டீஸர்


;