ரஜினியின் ‘2.0’ முக்கிய படப்பிடிப்பு இன்று ஆரம்பம்!

ரஜினி, எமி ஜாக்சன் நடிக்கும் ’2.0’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியது!

செய்திகள் 11-Oct-2017 11:33 AM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் முதலானோர் நடிக்கும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஒரு பாடல் தவிர்த்து அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பையும் ஏற்கெனவே முடித்து விட்ட படக்குழுவினர். இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலியில் மீதமுள்ள பாடல் காட்சியின் படப்பிடிப்பை இன்று துவங்கியுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ‘செட்’டில் ரஜினியும், எமி ஜாக்சனும் கலந்துகொண்டு நடித்து வருகிறார்கள். இந்த பாடல் காட்சியுடன் ‘2.0’வின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து விடுமாம். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமான முறையில் இம்மாதம் 27-ஆம் தேதி துபாயில் நடைபெறவிருக்கிறது. இதனை தொடர்ந்து ‘2.0’ டீஸர் வெளியிட்டு விழா அடுத்த மாதம் நவம்பர் 22-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது. டிரைலர் வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழா அநேகமாக ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ‘2.0’ ஜனவரி 25-ஆம் தேதி உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது.

#2PointO #Shankar #Rajinikanth #Superstar #AkshayKumar #AmyJackson #LycaProdyctuions #ARRahman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2 . 0 டீஸர்


;