3292 தியேட்டர்களில் ‘மெர்சல்’ தீபாவளி!

விஜய்யின் ‘மெர்சல்’ உலகம் முழுக்க 3292 தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது!

செய்திகள் 11-Oct-2017 10:56 AM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் சம்பந்தமான புதிய புதிய தகவல்கள் தினம் தினம் வெளியாகிய வண்ணம் உள்ளன. அட்லி இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே. சூர்யா முதலானோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான இசை அமைத்துள்ள இந்த படம் ரசிகர்களிடையை பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில் வருகிற 18-ஆம் தேதி உலகம் முழுக்க 3292 தியேட்டர்களில் ‘மெர்சல்’ வெளியாகவிருக்கிறது என்ற தகவல் டிரேட் வட்டாரத்திலிருந்து கிடைத்துள்ளது. மலேசியாவில் மட்டும் ‘மெர்சல்’ 800-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறதாம். தமிழில் வெளியாகும் அதே தினமே தெலுங்கு ‘மெர்சலா’ன ‘அதிரிந்தி’யும் வெளியாகவிருக்கிறது. ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி தயாரித்துள்ள ‘மெர்சல்’ இந்நிறுவனத்தின் 100-ஆவது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

#Vijay #Mersal #SJSuriya #Samantha #Kajal #Vadivelu #Atlee #SriThenandalFilms #ARRahman #NithyaMenen

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96


;