திரு இயக்கத்தில் ‘மிஸ்டர் சந்திரமௌலி’யில் இணையும் 2 தேசிய விருது பிரபலங்கள்!

கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’யில் இணையும் இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன்!

செய்திகள் 10-Oct-2017 11:34 AM IST VRC கருத்துக்கள்

திரு இயக்கத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்திற்கு ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்ற டைட்டில் சூட்டியுள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் நடித்த ‘மௌனராகம்’ படத்தில் கார்த்திக் அடிக்கடிம் பயன்படுத்தும் ஒரு சொல் இந்த சந்திரமௌலி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை நேற்று மாலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். ‘பாஃப்டா’ தனஞ்சயன் தயாரிக்கும் இப்படத்திற்காக ஏற்கெனவே ரெஜினா கெசண்டரா, வரல்டசுமி சரத்குமார், சதீஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தில் 2 தேசிய விருது பிரபலங்களும் நடிக்கவிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன். அட்லி இயக்கத்தில் ‘தெறி’ படத்தில் வில்லனாக நடித்த மகேந்திரன் இப்போது பிரியதரசன் இயக்கத்தில் ‘நிமிர்’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். அகத்தியன் ஏற்கெனவே ‘அகரம்’ என்ற படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

#GauthamKarthik #MrChandramouli #Karthik #GDhananjayan #Thiru #Varalaskhmi #ReginaCassandra

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் டீஸர்


;