பாலா இயக்கத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’யாகும் விக்ரம் மகன் துருவ்!

’அர்ஜுன் ரெட்டி’ ரீ-மேக்கில் விக்ரம் மகன் துருவை இயக்குகிறார் பாலா!

செய்திகள் 10-Oct-2017 10:30 AM IST VRC கருத்துக்கள்

தெலுங்கில் சுமார் ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவாகி 35 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் குவித்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படத்தின் தமிழ் ரீ-மேக் மூலம் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என்பதை சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். ஆனால் அப்போது இந்த படத்தை தமிழில் இயக்குவது யார் என்பது குறித்து எந்த தகவலையும் வெளியிடாத நிலையில், நேற்று மாலை அந்த அறிவிப்பும் வெளியானது. துருவை வைத்து தமிழில் ‘அர்ஜுன் ரெட்டி’யை பாலா இயக்குகிறார். பாலா இயக்கத்தில் விக்ரம் சில படங்களில் நடித்துள்ள நிலையில் இப்போது விக்ரம் மகன் துருவையும் பாலா இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கான கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பாலா தற்போது, ‘நாச்சியார்’ படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிசியாக உள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

#Bala #ChiyaanVikram #Dhruv #ArjunReddy #VijayDevarakonda #Vikram #Sketch

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2


;