‘அவள்’ பயமுறுத்தும்! சவால் விடும் சித்தார்த்!

சித்தார்த் நடித்து தயாரித்திருக்கும் ‘அவள்’ ஹாரர் திரைப்படம் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 9-Oct-2017 5:48 PM IST VRC கருத்துக்கள்

‘வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸும்’, நடிகர் சித்தார்த்தின் ‘எடாக்கி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அவள்’.ஹாரர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா கதாநயகன், கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் அதுல் குல்கர்னி, சுரேஷ், அனிஷா விக்டர் முதலானோரும் நடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படம் நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகவிருக்கிறாது. இதனை முன்னிட்டு சற்று முன் சித்தார்த், இப்படத்தை இயக்கியிருக்கும் மிலிந்த் ராவ், ஆண்ட்ரியா, அதுல்குரனி, இப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் கிரீஷ் ஆகியோர் பத்திரைகையாளர்களை சந்தித்தனர். அப்போது சித்தார்த் படம் குறித்து பேசும்போது,
‘‘எங்களுக்கு தெரிந்த ஒருவர் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தின் உருவாக்கப்பட்டுள்ளது. நாம் நிறைய ஹாரர் படங்களை பார்த்திருக்கிறோம். அந்த படங்களிலிருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட ஒரு படத்தை தரவேண்டும் என்ற முயற்சியில் நானும், இயக்குனர் மிலிந்த் ராவும் இணைந்து எடுத்துக்கொண்டுள்ள ஒரு முயற்சி தான் அவள். ஹாரர் படங்கள் என்றால் படம் பார்ப்பவர்களை பயமுத்த வேண்டு. அந்த வகையில் ‘அவள்’ பயமுறுத்துவதோடு வித்தியாசமான ஒரு அனுபவத்தை தரும் படமாக இருக்கும். அதற்கு நான் கியாரண்டி! மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இபப்டம் அடுத்த மாதம் 3-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது’’ என்றார்.

பத்திரைகையாளர் சந்திப்பில் திரையிடப்பட்ட இப்படத்தின் டிரைலர் மற்றும் ஒரு பாடல் காட்சி சித்தார்த் சொன்ன மாதிரி கொஞ்சம் மாறுபட்ட வகையில் அமைந்திருந்ததை நாமும் உணர்ந்தோம்..

#Aval #Siddharth #AndreaJeremiah #AtulKulkarni #Milind #LawrenceKishore

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - குலேபா பாடல் வீடியோ


;