தனுஷுடன் கை கோர்க்கும் கிருஷ்ணா!

தனுஷின் ’மாரி-2’ வில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் கிருஷ்ணா!

செய்திகள் 9-Oct-2017 10:31 AM IST VRC கருத்துக்கள்

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’ படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்து ‘மாரி-2’வில் நடிக்கவிருக்கிறார். பாலாஜி மோகன் இயக்கும் இந்த படத்தை தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிக்க, இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்திற்கான வில்லன் நடிகராக மலையாள நடிகர் டோவினோ தாமஸை ஒப்பந்தம் செய்த படக்குழுவினர் இப்போது நடிகர் கிருஷ்ணாவையும் ஒரு முக்கிய கேரக்டருக்காக தேர்வு செய்திருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கதாநாயகனாக நடித்துகொண்டே கதையில் முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வரும் கிருஷ்ணா சமீபத்தில் வெளியான ‘நிபுணன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இப்போது ‘மாரி-2’வில் நடிக்கவிருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். ரோபோ சங்கரும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு ஒளிபப்திவாளராக ஓம் பிரகாஷ் தேர்வாகியுள்ளார்.

#Krishna #Maari2 #Dhanush #BalajiMohan #SaiPallavi #Maari #WunderbarFilms #VadaChennai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ


;