ஜெட் வேகத்தில் வியாபாரமாகும் விஜய்சேதுபதி படங்கள்!

விஜய்சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்!

செய்திகள் 9-Oct-2017 10:28 AM IST Chandru கருத்துக்கள்

கவண், விக்ரம் வேதா என இந்த வருடத்தில் மட்டுமே இரண்டு பாக்ஸ் ஆபீஸ் சூப்பர்ஹிட்களைக் கொடுத்த விஜய்சேதுபதியின் சமீபத்திய ரிலீஸான ‘கருப்பன்’ படமும் பி அன்ட் சி சென்டர்களில் ஓரளவுக்கு எதிர்பார்த்த வசூலைக் குவித்துள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது ‘ஜுங்கா’ படத்திற்காக பாரிஸ் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ கூட்டணியான இயக்குனர் கோகுல், இசையமைப்பாளர் விபின் சித்தார்த் ஆகியோருடன் ‘ஜுங்கா’வில் கைகோர்த்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே படத்தின் விநியோக உரிமையை பெரிய விலை கொடுத்து வாங்கி கோடம்பாக்கத்தை ஆச்சரியத்தில் தள்ளியது ஏ அன்ட் பி குரூப் நிறுவனம்.

‘ஜுங்கா’வைத் தொடர்ந்து இப்போது விஜய்சேதுபதின் இன்னொரு படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையும் வியாபாரமாகியுள்ளது. விஜய் சேதுபதியுடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து கைப்பற்றியுள்ளது ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம். இப்படம் சாகஸங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஃபேன்டஸி காமெடிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

#Kavan #VikramVedha #Karuppan #VijaySethupathi #Junga #OruNallaNaalPaathuSolren #GauthamKarthik

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சீதக்காதி ட்ரைலர்


;