நவம்பர், டிசம்பரில் அடுத்தடுத்து ரிலீஸாகவிருக்கும் அதர்வா படங்கள்!

அதர்வாவின் ‘செம போத ஆகாதே’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’ படங்களின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு

செய்திகள் 9-Oct-2017 10:11 AM IST Chandru கருத்துக்கள்

எதிர்பார்த்த அளவுக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெறவில்லையென்றாலும் அதர்வாவின் வேறொரு பரிணாமத்தை வெளிப்படுத்தியது. ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ திரைப்படம். இப்படத்தைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் படங்களான ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் ‘செம போத ஆகாதே’ ஆகியவற்றின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதில் வித்தியாசமான தலைப்பு, போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் டீஸருடன் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘செம போத ஆகாதே’ திரைப்படம் நவம்பர் ரிலீஸாக வெளிவரவிருக்கிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அதர்வாவின் இன்னொரு படமான ‘இமைக்கா நொடிகள்’ கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராக்ஷி கன்னா உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தை ‘டிமான்ட்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். அதோடு, நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றமென்றில் நடித்திருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பிலிருக்கும் படங்களின் பட்டியலில் ‘இமைக்கா நொடிகள்’ படமும் ஒன்று.

#AtharvaaMurali #GeminiGanesanumSuruliRajanum #SemmaBodhaAagatha #ImaikkaNodigal #Nayantara #AnuragKashyap

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்


;