மீண்டும் ‘A’டாகூட தலைப்போடு களமிறங்கிய ‘ஹர ஹர மஹாதேவகி டீம்!

கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 7-Oct-2017 11:56 AM IST Chandru கருத்துக்கள்

ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சன்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிய ‘ஹர ஹர மஹாதேவகி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ‘விடலை’களிடம் பரவலான வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் பெரிதாக கல்லா கட்டியது. சென்சாரில் ‘ஏ’ சர்டிஃபிகேட்டை விரும்பிக் கேட்டு வாங்கிய இப்படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில், இதே கூட்டணி இப்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்திற்கு இன்று காலை பூஜை போட்டுள்ளது.

கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சன்தோஷ் பி ஜெயகுமார். இப்படத்திற்கு தருண் பாலாஜி ஒளிப்பதிவை மேற்கொள்ள, இசையமைப்பாளர் பாலமுரளி பாலா இசையமைக்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார்.

இப்படத்தைப் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார் பேசும் போது, ‘‘இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி ஜேனரில் உருவாகும் படம். இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் விரைவில் அறிவிப்போம். படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும்’’ என்றார்.

அண்மையில் வெளியாகி வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

#IruttuAraiyilMurattuKuthu #GauthamKarthik #KEGnanavelRaja #Karunakaran #Sathish

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹோலா ஹோலா வீடியோ பாடல் - கஜினிகாந்த்


;