இந்த தீபாவளி ‘தளபதி தீபாவளி’ : உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், சென்சாரையும் முடித்து ஆச்சரிய அறிப்பை வெளியிட்ட ‘மெர்சல்’ டீம்!

செய்திகள் 7-Oct-2017 11:19 AM IST Chandru கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என சில மாதங்களுக்கு முன்பே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டாலும், கடைசி நேரத்தில் டைட்டில் மீதான வழக்கு, அனிமல் வெல்பேர் அமைப்பிடமிருந்து வரவேண்டிய ஒப்புதல், திடீர் திடீரெ அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டங்கள் என ‘மெர்சல்’ தீபாவளிக்கு வருவதில் சில குழப்பங்களை ஏற்படுத்தியது. இந்த குழப்பங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று மாலையே சில அதிகாரபூர்வ அறிவிப்புகளை வெளியிட்டது தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம். நேற்று நண்பகல் வேளையில் தயாரிப்பாளர் முரளியைத் தொடர்புகொண்டு நாம் பேசியபோது, அனைத்துப் பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிட்டன, திட்டமிட்டபடி படம் தீபாவளிக்கு வெளியாகும், இன்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம் என நம்மிடம் கூறியிருந்தார். அந்த செய்தியை நமது இணையதளம் நேற்று வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, ‘மெர்சல்’ படத்தின் தலைப்பு வழக்கில் தேனாண்டாளுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்ததோடு, விலங்குகள் நல வாரியத்திடமிருந்து ஒப்புதல் கிடைத்தது. அதோடு, சென்சார் காட்சி முடிந்து ‘மெர்சல்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும், படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வருகிறதெனவும் அதிகாரபூர்வமாக அறிவித்தது தயாரிப்புத்தரப்பு. நேற்று மாலையிலேயே ‘மெர்சல்’ படத்தின் புரமோஷன் வேலைகள் துவங்கிவிட்டதால், இந்த தீபாவளி ‘தளபதி தீபாவளி’யாக மாறியுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில்.

#Mersal #Vijay #ARRahman #Samantha #KajalAgarwal #Vivek #SriThenandalFilms #Atlee #NithyaMenen

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0


;