‘மெர்சல்’ ஒரு பெயர் அல்ல; அது ஒரு உணர்வு! – தயாரிப்பாளர்

தவறான செய்திகளை நம்ப வேண்டாம்! ‘மெர்சல்’ தயாரிப்பாலர் முரளி ராமசாமி!

செய்திகள் 6-Oct-2017 3:45 PM IST VRC கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தை தீபாவளி ரிலீசாக திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளில் படக்குழுவினர் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிலியில் இதில் விஜய் ஜல்லிக்கட்டு வீரராக நடித்திருப்பதால் விலங்குகளை பயன்படுத்தி படம் பிடிக்கும்போது விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பது விதி. ஆனால் ‘மெர்சல்’ படத்திற்கு விலங்குகள் நல வாரியத்திடமிருந்து முறையான ‘தடையில்லா சான்றிதழ்’ கிடைக்கவில்லை என்றும், இதனால் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் ஒரு தகவல் வெளியானது. இது குறித்து நாம் ‘மெர்சல்’ தயாரிப்பாளர் முரளி ராமசாமியை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், ‘‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்புகள் சட்டப்படியான அனுமதிகள் பெற்று தான் நடந்துள்ளது. விலங்குகள் வாரியத்திடம் முறையான அனுமதி பெற்று தான் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. இது சம்பந்தமான சான்றிதழ்களை விலங்குகள் நல வாரியம் கொடுத்து விட்டது. இது சம்பந்தமாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. படம் எல்லா தடைகளையும் தாண்டி திட்டமிட்டபடி வெளியாகும்’’ என்று கூறினார்.

இந்நிலையில் சற்றுமுன் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தை சேரந்தவரும் தயாரிப்பாளர் முரளி ராமசாமியின் மனைவியுமான ஹேமா ருக்மணி ‘மெர்சல்’ குறித்து ட்வீட் செய்திருப்பதில் ‘இது பெயர் அல்ல, உணர்வு, தடைகள் தாண்டி வருகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ‘மெர்சல்’ திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Mersal #Vijay #ARRahman #Samantha #KajalAgarwal #Vivek #SriThenandalFilms #Atlee #NithyaMenen

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்டங்கரன் வீடியோ பாடல் - Sarkar


;