சினிமாவில் ரீ-என்ட்ரியாகிறார் நஸ்ரியா!

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் நஸ்ரியா!

செய்திகள் 6-Oct-2017 11:37 AM IST VRC கருத்துக்கள்

‘நேரம்’, ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’ முதலான தமிழ் படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் நஸ்ரியா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தமிழ் படம் ‘திருமணம் எனும் நிக்காஹ்’. நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார் நஸ்ரியா! அஞ்சலி மேனன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி, பார்வதி முதலானோருடன் நஸ்ரியா நடித்த ‘பெங்களூர் டேஸ்’ திரைப்படம் மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றதோடு இந்த படம் தமிழிலும் ரீ-மேக்கானது. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு அதே அஞ்சலி மேனன் இயக்கத்தில் நஸ்ரியா மீண்டும் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18-ஆம் தேதி முதல் ஊட்டியில் துவங்கவிருக்கிறது. மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தில் நஸ்ரியாவுடன் பிருத்திவிராஜ், பார்வதி ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள். அஞ்சலி மேனன் எழுதி இயக்கும் இந்த படமும் ‘பெங்களூர் டேஸ்’ படம் மாதிரி ‘யூத்’ஸை டார்கெட் வைத்து எடுக்கப்படும் படமாம்.

#NazriyaNazim #RajaRani #Neram #Nayyandi #ThirumanamEnumNikkah #Nazriya #FaahadFaazil

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;