‘தோனி’ குமார், ‘ரஜினி’ ராதா : விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணியின் ‘பக்கா’ கூட்டணி!

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் ரசிகராக ‘பக்கா’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு!

செய்திகள் 6-Oct-2017 11:32 AM IST Chandru கருத்துக்கள்

‘நெருப்புடா’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘பக்கா’ படத்தில் பிஸியாக இயங்கி வருகிறார் நடிகர் விக்ரம் பிரபு. ‘அதிபர்’ படத்தை தயாரித்த ‘பென் கன்ஸ்டோரியம்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பேரரசுவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய எஸ்.எஸ்.சூர்யா இயக்குகிறார். நிக்கி கல்ராணி, பிந்து மாதவி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் இப்படத்தில் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம்புலி, ரவி மரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி உட்பட ஏகப்பட்ட காமெடி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சத்யா சி இசையமைக்கிறார்.

இப்படம் குறித்துப் பேசிய விக்ரம் பிரபு, ‘‘கிராமத்துத் திருவிழாக்களில் பொம்மை விற்கும் ‘தோனி குமார்’ என்ற கேரக்டரில் இப்படத்தில் நான் நடிக்கிறேன். ரசிகர் மன்றம் வைத்து நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வீரர் ‘தல’ எம்.எஸ்.தோனியின் தீவிர ரசிகராக இப்படத்தில் நடித்து வருகிறேன். அதேபோல், ‘ரஜினி ராதா’ என்ற கேரக்டரில் ரஜினி ரசிகையாக நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி. கிராமத்துத் தலைவரின் மகளாக நதியா என்ற கேரக்டரில் பிந்து மாதவி நடிக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் காமெடிக் காட்சிகள் பெரியளவில் ரசிக்கப்படும் என நம்புகிறேன்!’’ என்றார்.

#Pakka #VikramPrabhu #NikkiGalrani #BinduMadhavi #Soori #SSSuriya #SathyaC

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பாக்கி முனை டீஸர்


;