பாடகி ஆனார் அஜித் பட தயாரிப்பாளர்!

கூத்தன் படத்தின் மூலம் பின்னணிப் பாடகியான திரைப்பட தயாரிப்பாளர்!

செய்திகள் 6-Oct-2017 11:20 AM IST VRC கருத்துக்கள்

அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால், ‘வேதாளம்’ மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘கருப்பன்’ உட்பட பல படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னத்தின் மருமகளும் இந்த படங்களின் தயாரிப்பில் பங்கு கொண்டவருமானவர் ஐஸ்வர்யா. ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதிகிருஷ்ணாவின் மனைவியான இவர் தெலுங்கிலும் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். ஐஸ்வர்யா இப்போது ‘கூத்தன்’ என்ற படத்தின் மூலம் பின்னணிப் பாடகியுள்ளார். இது குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள செயதி குறிப்பில்,

‘கூத்தன்’ படத்தில் பாலாஜி இசையில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம் பெறுகிறது. இதில் ஒரு பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளர். ஐஸ்வர்யாவுக்கு நல்ல குரல் வளம் இருப்பதை தெரிந்துகொண்ட படக்குழுவினர் அவரை ஒரு பாடலை பாட அழைத்திருக்கிறார்கள். அவர் அந்த பாடலை பாடிய விதம், குரலின் இனிமை ஆகியவை படத்தின் தயாரிப்பாளர் நில்க்ரிஸ் முருகனுக்கும், இசை அமைப்பாளருக்கும் மிகவும் பிடித்து போனது. அதனால் மற்ற ஒரு பாடலையும் இவரே பாடட்டும் என்று முடிவு செய்தனர். இப்படி ‘கூத்தனு’க்காக ஐஸ்வர்யா இரண்டு பாடல்களை பாடி கொடுத்திருக்கிறார். இதுவரை திரைப்பட தயாரிப்பாளராக இருந்த ஐஸ்வர்யா இப்போது பின்னணி பாடகியும் ஆகிவிட்டார். இவர் சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தெலுங்கில் உருவாகி வரும் ‘ஆக்சிஜன்’ என்ற படத்திற்காகவும் இரண்டு பாடல்களை பாடியுள்ளார். ‘கூத்தன்’ ஏ.எல்.வெங்கி இயக்கத்தில் அறிமுக நடிகர் ராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் படமாகும்.

#Aishwarya #AMRatnam #Ajith #YennaiArindhaal #Vedalam #VijaySethupathi #Karuppan #JyothiKrishna #Koothan #Balaji

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ


;