சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு நாளை 2வது சர்ப்ரைஸ்!

2வது முறையாக ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தப்போகும் ‘2.0’ டீம்!

செய்திகள் 6-Oct-2017 10:53 AM IST Chandru கருத்துக்கள்

ஒருபுறம் ‘காலா’, இன்னொருபுறம் ‘2.0’ என இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்துகொண்டிருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இதில் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முழுவதும் முடிவடைந்து தற்போது 3டி, கிராபிக்ஸ் உள்ளிட்ட டெக்னிக்கல் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த வருடம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘எந்திரன்’ படத்தின் இந்த 2ஆம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு உலகளவில் விரிவடைந்துள்ளது.

டெக்னிக்கலாக பல புதிய விஷயங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தவுள்ள ‘2.0’ படத்தின் 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டதை மேக்கிங் வீடியோவாக ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. ரசிகர்களின் புருவங்களை உயர்த்த வைத்த இந்த வீடியோவிற்கு யு டியூபில் 87 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 2வது 3டி மேக்கிங் வீடியோவை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடவிருப்பதாக இயக்குனர் ஷங்கர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அக்ஷய்குமார், எமி ஜாக்ஸன் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகஅதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

#2pointO #Rajinikanth #Shankar #AkshayKumar #AmyJackson #ARRahman #Endhiran2 #LycaProduction #Superstar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0


;