‘ஹர ஹர மஹாதேவகி‘ நாயகனுக்கு ஜோடியாகும் ‘பார்ட்டி’ நாயகி!

திரு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிகை ரெஜினா ஒப்பந்தம்

செய்திகள் 5-Oct-2017 12:14 PM IST Chandru கருத்துக்கள்

‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ முதலான படங்களை இயக்கிய திரு அடுத்து இயக்கும் படத்தில் அப்பா கார்த்திக், மகன் கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்ற செய்தியை நேற்று வெளியிட்டிருந்தோம். இந்த படத்தை தனஞ்செயன் தனது ‘பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா’வின் புதிய மீடியா நிறுவனமான ‘கிரியேட்டீவ் என்டர்டெயின்மென்ட் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் கார்த்திக் நேர்மையான அரசு அதிகாரியாக நடிக்க, காமெடியனாக சதீஷ் நடிக்கிறாராம்.

வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’ படத்தில் தற்போது நாயகியாக ரெஜினா நடித்துக் கொண்டிருக்கும் ரெஜினா கெஸன்ட்ரா இப்படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு நாயகி யார் என்பதை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

#ReginaCassandra #Gauthamkarthik #KarthikMuthuraman #Thiru #Party #Samar #NaanSigappuManithan #BOFTAProduction

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் ட்ரைலர்


;