உதயநிதி படத்திற்கு ‘நிமிர்’ தலைப்பை பரிந்துரைத்த பிரபல இயக்குனர்!

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்திற்கு ‘நிமிர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது

செய்திகள் 5-Oct-2017 11:33 AM IST Chandru கருத்துக்கள்

பிரியதர்சன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு, அப்படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு தென்காசியில் 36 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஷெட்யூலுக்காக துபாய் பறக்கவிருக்கிறது பிரியதர்ஷன், உதயநிதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம். இந்நிலையில், இப்படத்திற்கு ‘நிமிர்’ என தலைப்பு வைத்திருப்பதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்கும் இயக்குனர் மகேந்திரன் தான் இப்படத்திற்கு ‘நிமிர்’ என தலைப்பு வைக்கலாம் என இயக்குனர் பிரியதர்ஷனுக்கு யோசனை கூறினாராம்.

மலையாள ‘மகேஷின்டெ பிரதிகாரம்’ படத்தின் ரீ-மேக்காக உருவாகி வரும் ‘நிமிர்’ படத்தில் உதயநிதியுடன் மலையாள நடிகை நமீதா பிரமோத் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக, இரண்டாவது கதாநாயகியாக பார்வதி நாயர் நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனியும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து வருவதோடு அவரே படத்திற்கு வசனமும் எழுதுகிறார். இந்த படத்திற்கு தர்புகா சிவா இசை அமைக்கிறார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். ‘மூன்லைட் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் சந்தோஷ் குருவிளா தயாரிக்கிறார்.

#Nimir #UdhayanidhiStalin #Priyadarsan #Mahendiran #MaheshintePrathikaaram #NamithaPramoth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - நெஞ்சில் மாமழை வீடியோ பாடல்


;