விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ டிரைலர் ரிலீஸ் தேதி?

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாதுரை’ பட  டிரைலர் 11-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 4-Oct-2017 4:26 PM IST VRC கருத்துக்கள்

‘எமன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்கள் ‘அண்ணாதுரை’ மற்றும் ‘காளி’. இதில் ராதிகா சரத்குமாரின் ‘R STUDIOS’ நிறுவனமும், விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ‘அண்ணாதுரை’ பட வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஜி.சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, டயானா இணைந்து நடிக்கும் இப்படத்தின் டிரைலர் இம்மாதம் 11-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ‘பிச்சைக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய ‘சைத்தான்’, ‘எமன்’ ஆகிய படங்கள் குறிப்பிடும்படியான வெற்றியை தராத நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் ‘அண்ணாதுரை’ மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படம் தெலுங்கில் ‘இந்திரஜித்’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. ‘அண்ணாதுரை’க்கு அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கு ‘ காளி’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Annadurai #VijayAntony #FathimaVijayAntony #RadhikaSarathkumar #Yeman #Kaali #RSTUDIOS #GSrinivasan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திமிருபுடிச்சவன் டீஸர்


;