காரைக்குடியில் துவங்கியது ‘கலகலப்பு-2’

சுந்தர்.சி இயக்கும் ‘கலகலப்பு-2’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியது!

செய்திகள் 4-Oct-2017 11:27 AM IST VRC கருத்துக்கள்

‘சங்கமித்ரா’ படத்திற்கு முன்பாக சுந்தர்.சி, ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார் என்றும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா, மிர்ச்சி சிவா முதலானோர் நடிக்க இருக்கிறார்கள் என்றும் இந்த படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கிறார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது என்ற விவரங்களை வெளியிட்டிருந்தோம். அப்போது வெளியிட்டிருந்தபடி ‘கலகலப்பு-2’வின் படப்பிடிப்பு இன்று காரைக்குடியில் துவங்கியது. காரைக்குடியில் நடைபெறும் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு புனா, வாரணாசி, ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் நடக்கவிருக்கிறது. இந்த படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடித்து, வெளியிட்டு ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி.

#SundarC #Kalakalappu2 #Sangamithra #Jiiva #Jai #CatherineTresa #NikkiGalrani #MirchiShiva #HipHopAadhi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா டீஸர்


;