உதயநிதி ஸ்டாலினின் ‘இப்படை வெல்லும்’ சென்சார் ரிசல்ட்?

கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி, மஞ்சிமா மோகன் நடிக்கும்  ‘இப்படை வெல்லும்’ படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 3-Oct-2017 4:46 PM IST VRC கருத்துக்கள்

கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் இணைந்து நடிக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் இப்படம் சென்சார் குழுவினர் பார்வைக்கு சென்றது. ’இப்படை வெல்லும்’ படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்தில் எந்த ’கட்’டும் சொல்லவில்லையாம். ஆனால் படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் தான் வழங்கியிருக்கிறார்கள். படத்திற்கு படம் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் சாஃப்ட்வேர் என்ஜீனியாராக நடித்துள்ளாராம். மதுரை நகர பின்னணியில் ‘தூங்கா நகரம்’ படத்தை இயக்கிய கௌரவ் நாராயணன் ‘சிகரம் தொடு’வில் ATM கொள்ளை பற்றி சொல்லியிருந்தார். ‘இப்படை வெல்லும்’ படத்தில் சாஃப்ட்வேர் துறை சம்பந்தப்பட்ட ஒரு கதையை கையிலெடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#IppadaiVellum #UdhayanidhiStalin #ManjimaMohan #GuaravNarayanan #SigaramThodu #LycaProduction

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - நெஞ்சில் மாமழை வீடியோ பாடல்


;