‘திருட்டுப் பயலே-2’ ரிலீஸ் தகவல்!

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்துடன் களமிறங்கும் ‘திருட்டுப் பயலே-2’

செய்திகள் 3-Oct-2017 2:51 PM IST VRC கருத்துக்கள்

சுசிகணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திருட்டுப் பயலே-2’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து, சமீபத்தில் சென்சார் காட்சியும் நடைபெற்றது. சென்சாரில் ‘U/A’ சர்டிஃபிக்கெட் கிடைத்திருக்கும் ‘திருட்டுப் பயலே-2’வை வெளியிடும் வேலைகளில் ஈடுப்பட்டுள்ள படக்குழுவினர், இந்த படத்தை நவம்பர் முதல் வாரம் வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் முதலானோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் ‘திருட்டுப் பயலே-2’வை முதல் பாகத்தை தயாரித்த ‘ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு விதயாசாகர் இசை அமைத்திருக்கிறார். செல்லத்துரை ஒளிப்பதிவு செய்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் ‘மாநகரம்’ சந்தீப் கிஷன், மெஹரின், விக்ராந்த், சூரி முதலானோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனால் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

#Thiruttupayale2 #Susiganesan #BobbySimha #AmalaPaul #Bharathwaj #AGSEntertainment #Thiruttupayale

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்


;