விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’வில் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ சென்டிமென்ட்!

பாரிஸில் விஜய்சேதுபதி, சாயிஷா இணைந்து நடிக்கும் ‘ஜுங்கா’வின் படப்பிடிப்பு தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறவிருக்கிறது!

செய்திகள் 3-Oct-2017 12:17 PM IST VRC கருத்துக்கள்

‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியும் இயக்குனர் கோகுலும் இரண்டாவது முறையாக இணையும் படம் ‘ஜுங்கா’. ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ நான்கு வருடங்களுக்கு முன் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியானது. இப்போது அதே சென்டிமென்ட் ‘ஜுங்கா’விலும் தொடர்கிறது. விஜய்சேதுபதியும், கோகுலும் மிண்டும் இணைந்துள்ள ‘ஜுங்கா’வின் படப்பிடிப்புக்காக அதே அக்டோபர் 2-ஆம் தேதி பாரிஸ் நகரில் கை கோர்த்துள்ளனர் விஜய்சேதுபதியும், இயக்குனர் கோகுலும் இசை அமைப்பாளர் சித்தார்த் விபினும்! இங்கு ‘ஜுங்கா’வின் படப்பிடிப்பு தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறவிருக்கிறதாம். இதுவரை விஜய்சேதுபதி நடித்த படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாககும் படம் ‘ஜுங்கா’ என்று கூறப்படுகிறது. விஜய்சேதுபதியே தயாரிக்கும் இந்த படத்தை படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே நடிகர் அருண் பாண்டியனின் ‘பி அண்ட் பி குரூப்ஸ்’ நிறுவனம் கைபற்றியிருக்கிற செய்தியை ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். ‘வனமகன்’ படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் நடித்த சாயிஷா இப்படத்தில் கதாநயகியாக நடிக்கிறார்.

#VijaySethupathi #Junga #Gokul #Sayeesha #SiddarthVipin #Vanamagan #Arunpandian

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்


;