‘அடங்காதே’யில் ஜி.வி.பிரகாஷுடன் இணையும் சீமான்!

இறுதிகட்டத்தை எட்டியுள்ள ஜி.வி.பிரகாஷின் ‘அடங்காதே’யில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் சீமான்!

செய்திகள் 3-Oct-2017 12:02 PM IST VRC கருத்துக்கள்

ஸ்ரீகிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அடங்காதே’. அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ், சுரபி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சரத்குமார், பாலிவுட் நடிகை மந்திரா பேடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் மந்திரா பேடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மந்திராபேடி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நேற்று முன் தினத்துடன் முடிந்துவிட்டதை முன்னிட்டு, ‘அடங்காதே’யில் நடித்த அனுபவம் குறித்து மந்திரா பேடி ட்வீட் செய்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டதை எட்டியிருப்பது குறித்தும், இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் இயக்குனரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் நடித்திருப்பது குறித்தும் ஜி.வி.பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார். ‘அடங்காதே’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்க, பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

#Adangathey #GVPrakashKumar #Seeman #SriGreenProduction #ShanmugamMuthusamy #MandiraBedi #SarathKumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;