2016-ல் ஒரு வார இடைவெளி! 2017-ல் ஒரே நாள்! – விஜய், சசிகுமார்

மெர்சல், அறம் படங்களுடன் களமிறங்கும் சசிகுமாரின் ‘கொடிவீர்ன்’

செய்திகள் 29-Sep-2017 4:11 PM IST VRC கருத்துக்கள்

‘குட்டிபுலி’யை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் இரண்டாவது படமான ‘கொடிவீரன்’ படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து விட்ட நிலையில் இப்படத்தின் பாடல்களும், டீஸரும் நாளை (30-9-17) வெளியாகவிருக்கிறது. சசிகுமார், மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா முதலானோர் நடிக்கும் இந்த படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். சசிகுமாரின் ‘கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்கும் ‘கொடிவீரன்’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தீபாவளி ரேசில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’, நயன்தாராவின் ’அறம்’ முதலான படங்கள் களத்தில் இருக்கிற நிலையில் இப்போது சசிகுமாரின் ‘கொடிவீர’னும் களத்தில் குதித்துள்ள்து. கடந்த ஆண்டு விஜய் நடித்த ‘தெறி’ ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியானது. சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ தெறி வெளியாகி ஒரு வார இடைவெளியில் வெளியானது. ஆனால் இந்த தீபாவளிக்கு இவர்கள் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகி நேருக்கு நேர் மோதும் சூழ்இலை உருவாகியுள்ளது.

#Kodiveeran #Sasikumar #MahimaNambiar #Poorna #Sanusha #Vijay #Mersal #CompanyProduction #NRRaghunandhan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அசுரவதம் - ட்ரைலர்


;