விஷால், சுசீந்திரனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள ‘மேயாத மான்’ படத்தின் பாடல்கள் லயோலா கல்லூரியில் வெளியிடப்படுகிறது!

செய்திகள் 27-Sep-2017 12:19 PM IST VRC கருத்துக்கள்

ஸ்டோன் பெஞ்ச் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன் சந்தானம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘மேயாத மான்’. சென்னை பின்னணியில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் வைபவ், பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க, ரத்னகுமார் இயக்கியுள்ளார்.

சந்தோஷ் நாராயணனும், திரைப் பாடகர் பிரதீப் குமாரும் இணைந்து இசை அமைத்திருக்கும் இந்த படத்தில் 7 பாடல்கள் இடம் பெறுகிறது. இதில் 3 பாடல்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்டன. இந்நிலையில் இப்படத்தின் 7 பாடல்களின் வெளியீட்டு விழா இன்று மாலை லயோலா கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. லயோலா கல்லூரி மாணவர்களின் ‘Ovations’ நிகழ்ச்சி இடையே இப்பாடல்கள் வெளியாகவிருக்கிறது. வழக்கமாக சுசீந்திரன், விஷால் முதலானோர் சம்பந்தப்பட்ட படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் இந்த கல்லூரியில் நடப்பது வழ்க்கம். இப்போது அவர்கள் வரிசையில் கார்த்திக் சுப்புராஜும் இணைந்து விட்டார். இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி Think Music YouTube சேனலில் நேரலையாக ஒளிபரப்பபடுகிறது.

#MeyaadhaMann #KarthikSubburaj #Vishal #Suseendiran #Vaibhav #StoneBenchPvtLtd #PradeepKumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராட்சசன் ட்ரைலர்


;