தெலுங்குக்கு போகும் குரங்கு பொம்மை!

தெலுங்கில் ரீ-மேக்காகும் விதார்த், பாரதிராஜாவின் குரங்கு பொம்மை!

செய்திகள் 27-Sep-2017 11:45 AM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் கிடைத்த படம் ‘குரங்கு பொம்மை’. விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் முதலானோர் முய்க்கிய வேடங்களில் நடித்த இப்படம் தெலுங்கிலும் ரீ-மேக் ஆகவிருக்கிறது. ‘குரங்கு பொம்மை’யின் தெலுங்கு ரீ-மேக் உரிமையை 'S Focuss' என்ற நிறுவனம் கைபற்றியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள 'S Focuss' அதிபர் எம்.சரவணன், ‘‘திறமையான கலைஞர்களுக்கும், தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம். இயக்குனர் நித்திலன் திறமையான படைப்பாளி! ‘குரங்கு பொம்மை’ ஒரு அற்புதமான படைப்பு. நல்ல படங்களுக்கு மொழி எல்லை கிடையாது. தெலுங்கிலும் இப்படம் நல்ல வர்வேற்பு பெறும் என்பது என் நம்பிக்கை’’ என்று கூறியுள்ளார்.

#SFocuss #KuranguBommai #Nithilan #Viddarth #Bharathiraja #Tollywood

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

படைவீரன் - மாட்டிகிட்டேன் வீடியோ பாடல்


;