விரைவில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா-2’

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது!

செய்திகள் 26-Sep-2017 2:41 PM IST VRC கருத்துக்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘த்ரிஷா இல்லானா நயன்தாரா’. இந்த படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்நிலையில் ஆதிக்கும், ஜி.வி.பிரகாஷும் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள் என்றும் இந்த படத்திற்கு ‘விர்ஜின் மாப்பிள்ளை’ என்று டைட்டில் வைத்துள்ளார்கள் என்றும் செய்தியை வெளியிட்டிருந்தோம். இந்த படம் சம்பந்தமாக லேட்டஸ்டாக கிடைத்த தகவல், இப்படத்தின் ஒரு கட்டப் படப்பிடிப்பு தமிழ் நாட்டிலுள்ள ஒரு ஹில் ஸ்டேஷனில் நடந்து முடிந்துள்ளதாம். மீதியுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் பாலாவின் ‘நாச்சியார்’ மற்றும் ‘செம’ 4G, முதலான படங்களின் வேலைகள் முடிந்ததும் துவங்கவிருக்கிறதாம். இதில் பாண்டிராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘செம’ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரனும், ஜி.வி.பிரகாஷும் முதன் முதலாக இணைந்த ‘த்ரிஷா இல்லான நயன்தாரா’ வெற்றிப் படமாக அமைந்ததால் ‘விர்ஜின் மாப்பிள்ளை’ என்ற டைட்டிலுக்கு பதிலாக ‘த்ரிஷா இல்லானா நயன்தாரா-2’ என்று டைட்டில் வைக்கவும் இப்படக் குழுவினர் பரிசீலனை செய்து வருகிறார்களாம்! இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TrishaIllanaNayantara #GVPrakash #AdhikRavichandran #VirginMappillai #TrishaIllanaNayantara2 #Bala #Nachiyaar #Semma

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சர்வம் தாள மயம் டீஸர்


;