பிரின்ஸ், சூப்பர் ஸ்டார் பட்டங்களை விரும்பாத மகேஷ் பாபு!

தமிழகத்தில் மட்டும் 400 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகிறது மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’

செய்திகள் 25-Sep-2017 3:15 PM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, எஸ்.ஜே.சூர்யா, பரத், ரகுல் ப்ரீத் சிங் முதனாலோர் நடித்துள்ள ‘ஸ்பைடர்’ திரைப்படம் நாளை மறுநாள் (27-9-17) உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இந்த படத்தை 400 தியேட்டர்களுக்கும் மேல் வெளியிடவிருப்பதாக இப்படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். இதனையொட்டி சென்னையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மகேஷ்பாபு பேசும்போது,
‘‘தமிழகத்தில் மிகப் பெரிய ஸ்டார்கள் இருக்கிறார்கள், இவர்களில் உங்களுக்கு யார் போட்டி என்று கேட்கிறார்கள். நான் யாருடனும் போட்டி போட இங்கு வரவில்லை. ‘ஸ்பைடர்’ 125 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள படம். இந்த படத்தை தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்தால் தான் பெரிய அளவில் வசூலை ஈட்ட முடியும். அதனால் தான் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழியில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மற்றபடி யாருக்கும் நான் போட்டியாக களமிறங்க நினைத்து இந்த படத்தில் நடிக்கவில்லை. இங்கும் நிறைய பெரிய பெரிய நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். பெரிய பட்ஜெட்டில் படங்கள் எடுக்கிறார்கள். முதலீடு செய்யும் பட்ஜெட்டுக்கு தகுந்த வசூல் இருக்க வேண்டும் என்றால் அந்த படம் பல மொழிகளில் வெளியாக வேண்டும்.

பிரின்ஸ், சூப்பர் ஸ்டார் என்று நான் பட்டங்கள் வைத்துகொண்டிருப்பது பற்றியும் கேட்கிறார்கள். உண்மையை சொன்னால் பட்டங்கள் மீது எனக்கு விருப்பமில்லை. தெலுங்கு ரசிகர்களிடம் அப்படி அழைக்க வேண்டாம் என்று சொன்னால் கூட அவர்கள் கேட்பதில்லை. தமிழிலும் அதுபோன்ற பட்டங்களை போட்டுக்கொள்ள விரும்பவில்லை. எல்லோரும் என்னை நேசித்தால், ரசித்தால் போதும்.

இந்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்தது, எஸ்.ஜே.சூர்யா, பரத், நகுல் ப்ரீத் சிங் முதலானோருடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுவபம். இதுபோன்று ஒரு மொழியை கடந்து மற்ற மொழிகளுக்கும் எற்ற கதையாக அமையுமானால் தொடர்ந்து தமிழிலும் நடிப்பேன்’’ என்றார் மகேஷ் பாபு.

#Spyder #MaheshBabu #ARMurugadoss #SJSuriya #RakulPreetSingh #Prince

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவ் டீஸர்


;