புத்தாண்டில் படப்பிடிப்பைத் துவங்கும் அறிவழகன், நயன்தாரா கூட்டணி!

நயன்தாரா - அறிவழகன் படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள்!

செய்திகள் 25-Sep-2017 2:05 PM IST Chandru கருத்துக்கள்

நாயகிக்கான முக்கியத்துவமுள்ள படங்களாக நயன்தாரா நடித்துவரும் அறம், கொலையுதிர் காலம் படங்களின் வரிசையில் அறிவழகன் இயக்கத்தில் நயன் நடிப்பில் உருவாகவிருக்கும் படமும் இடம்பிடித்திருக்கிறது. எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளுக்கு விஜே சபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படம் குறித்து சில நாட்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்போது இப்படம் பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

ஈரம் படத்தை ஹாரர் த்ரில்லராகவும், ஆறாது சினம் படத்தை இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராகவும், குற்றம் 23 படத்தை மெடிக்கல் த்ரில்லராகவும் இயக்கிய அறிவழகன் நயன்தாரா நடிப்பில் உருவாகவிருக்கும் படத்தை சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக்கவிருக்கிறாராம். இப்படத்தில் நயனுக்கு ஜோடியாக நடிப்பவருக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறதாம். ஆனால், அவருக்கான பங்களிப்பு குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி உள்ளிட்ட ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் இன்னும் மூன்று மாத காலம் நடைபெறவிருப்பதால் 2018ஆம் ஆண்டு துவக்கத்தில் படத்தின் படப்பிடிப்பைத் துவங்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

#Nayanthara #Arivazhagan #Eeram #Kuttram23 #AarthuSinam #Aramm #KolaiyuthirKaalam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீயும் நானும் அன்பே வீடியோ பாடல் - இமைக்க நொடிகள்


;