2018 பொங்கல் ரிலீஸில் சூர்யாவுடன் களமிறங்கும் விஷால்!

மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘இரும்புத்திரை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

செய்திகள் 25-Sep-2017 12:41 PM IST Chandru கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்திற்கு விமர்சனரீதியாக ஓரளவுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘டிடெக்டிவ்’ திரைப்படம் தீபாவளி தினமான அக்டோபர் 18ஆம் தேதி ஆந்திரா, தெலுங்கானாவில் ரிலீஸாக உள்ளது. அதோடு இதே நாளில் மோகன்லால், விஷால் இணைந்து நடித்திருக்கும் ‘வில்லன்’ மலையாள திரைப்படமும் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

தீபாவளிக்கு விஷாலின் 2 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, வரும் பொங்கல் பண்டிகைக்கும் விஷாலின் இன்னொரு பட ரிலீஸும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுகம் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா ஆகியோர் நடிக்கும் ‘இரும்பு திரை’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வரவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படமும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடதக்கது.

#Vishal #Irumbuthirai #PSMithran #Thupparivalan #ThaanaSernthaKoottam #MohanLal #Villan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;