‘கலகலப்பு 2’வில் கைகோர்க்கும் ஜீவா, ஜெய், நிக்கி, கேத்ரின்!

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘கலகலப்பு 2’ படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள் யார்... யார்?

செய்திகள் 25-Sep-2017 12:23 PM IST Chandru கருத்துக்கள்

2012ல் வெளிவந்து சூப்பர்டூப்பர் வெற்றியைப் பெற்ற படம் சுந்தர்.சியின் ‘கலகலப்பு’. முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் சிவா, விமல், அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கவுள்ளார் சுந்தர்.சி. இந்த 2ஆம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த சிவாவும், ‘பிக்பாஸ்’ புகழ் ஓவியாவும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளரான குஷ்பு.

‘கலகலப்பு 2’வில் ஜீவா, ஜெய் ஆகியோர் நாயகர்களாக நடிக்க, நாயகிகளாக நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரஸா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். சுந்தர்.சியின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறியிருக்கும் ஹிப் ஹாப் தமிழா இப்படத்திற்கும் இசையமைப்பாராம். அக்டோபரில் இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் துவங்குகின்றன.

#Kalakalappu2 #SundarC #Kalakalappu #Siva #Vimal #Anjali #Oviya #Jiiva #Jai #NikkiGalrani #CatherineTresa

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வரேன் வரேன் வீடியோ பாடல் - சீமராஜா


;