காஜல் அகர்வாலின் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் ‘குயின்’ பிரபலம்!

‘குயின்’ ஹிந்திப்பட தமிழ், கன்னட ரீமேக் பற்றிய புதிய தகவல்கள்

செய்திகள் 25-Sep-2017 11:15 AM IST Chandru கருத்துக்கள்

கங்கனா ரனாவத் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த ‘குயின்’ படம் பாலிவுட் வட்டாரங்களில் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலிவுட்டில் ஹிட்டடித்த அப்படத்தை தமிழ், கன்னடத்தில் ரீமேக் செய்து ரமேஷ் அர்விந்த் இயக்குகிறார் என்ற செய்தியை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்போது அப்படம் குறித்த மேலும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. ‘குயின்’ ஒரிஜினல் வெர்ஷனுக்கு இசையமைத்த அமித் திரிவேதியையே தமிழ், கன்னட வெர்ஷனுக்கும் இசையமைப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஆனாலும், ‘குயின்’ ஹிந்தி வெர்ஷனுக்கு போட்ட ட்யூன்களை பயன்படுத்தாமல் உள்ளூர் நேட்டிவிட்டிக்குத் தகுந்தபடி புதிதாக இசையமைத்துத் தரும்படி திரிவேதியிடம் கேட்டிருக்கிறார்களாம்.

‘பாரிஸ் பாரிஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள ‘குயின்’ தமிழ் ரீமேக்கில் நாயகியாக காஜல் அகர்வாலும், ‘பட்டர்ஃபிளை’ எனப் பெயரிடப்பட்டுள்ள கன்னட வெர்ஷனில் பருல் யாதவ்வும் நாயகிகளாக நடிக்கிறார்கள். தமிழ், கன்னடத்தில் நாயகனாக சஷி வருண் நடிக்கிறார். சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார். ‘பாரிஸ் பாரிஸ்’ படத்திற்கு தமிழச்சி தங்கபாண்டியன் வசனம் எழுதுகிறார். ‘பட்டர்ஃபிளை’யின் படப்பிடிப்பு அக்டோபர் 4ஆம் தேதி முதல் கோகர்னாவில் போடப்பட்டுள்ள செட்டில் துவங்கவிருக்கிறதாம். விரைவில் தமிழ் வெர்ஷனுக்கான படப்பிடிப்பு குறித்த செய்தியையும் அறிவிப்பதாக ரமேஷ் அர்விந்த் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று (செப்டம்பர் 25) இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

#ParisParis #KajalAgarwal #Queen #KanganaRanaut #RameshAravind #AmitTrivedi #Vivegam #Mersal

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;