‘தெறி’யில் ‘வேதாளம்’ டச்... இப்போ... ‘மெர்சலி’ல் ‘விவேகம்’ டச்!

‘மெர்சல்’ டீஸர் பற்றிய ரசிகர்களின் பார்வை

செய்திகள் 21-Sep-2017 6:33 PM IST Chandru கருத்துக்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மெர்சல்’ படத்தின் டீஸர் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று மாலை 6 மணியளவில் யு டியூபில் ரிலீஸானது. முதல் 15 நிமிடங்களிலேயே இந்த டீஸர் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டதோடு, 1 லட்சத்தி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்துள்ளது. ஆனால், விஷயம் அதுவல்ல... அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ டீஸர் வந்தபோது அதில் அஜித்தின் ‘வேதாளம்’ டச் இருந்ததாக ரசிகர்கள் முணுமுணுத்தனர். உதாரணத்திற்கு, ‘வேதாளம்’ பட டீஸரில் ‘கண்ணாமூச்சி ரே... ரே...’ என அஜித் வசனம் பேச, ‘தெறி’ டீஸரில் ‘ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...’ என ரைம்ஸ் வாசித்தார்.

இப்போது வெளியாகியிருக்கும் ‘மெர்சல்’ டீஸரும் விஜய்யின் பவர்புல் வசனம் ஒன்றோடு துவங்குகிறது. ‘‘நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உனைக் கேட்கும்...! நீ விதைத்த விதையெல்லாம்... உன்னை அறுக்க காத்திருக்கும்..!’’ என்ற வசனத்தை விஜய் ஆக்ரோஷமாக கூறுவதுபோல் டீஸர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டீஸர் பார்த்த ரசிகர்கள் பலரும், ‘விவேகம்’ டீஸரில் அஜித் பேசிய ‘‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்.... நீ தோத்துட்ட தோத்துட்டேன்னு சொன்னாலும்...’’ என்ற வசன மாடுலேஷனில் இருப்பதாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படியோ... ‘மெர்சல்’ டீஸர் இதற்கு முந்தைய யு ட்யூப் ரெக்கார்டுகள் அனைத்தையும் உடைக்கும் என்று கூறப்படுகிறது.

#Vijay #Ajith #Mersal #Vivegam #Theri #Vivegam #Atlee #Siva #SriThenandalFilms #Samantha #Kajal #NithyaMenen #Vadivelu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

NOTA Trailer


;