30 வருடங்களுக்குப்பிறகு கமல் படப்பாணியில் படம் இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் ‘மெர்குரி’ படம் பற்றிய புதிய தகவல்கள்

செய்திகள் 21-Sep-2017 10:46 AM IST Chandru கருத்துக்கள்

பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மெர்குரி’. பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன் உட்பட பலர் நடிக்கின்றனர். திரு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார் விவேக் ஹர்ஷன்.

இப்படத்தை முழுக்க முழுக்க வசனமே இல்லாமல் உருவாக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1987ஆம் வருடம் வெளிவந்த ‘பேசும் படம்’தான் இதுபோல் வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்ட படம். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதைப்போன்ற ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இப்படத்தில் முதல்முறையாக வில்லத்தனம் காட்டி நடித்திருக்கிறாராம் பிரபுதேவா. த்ரில்லர் படமான ‘மெர்குரி’யின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. வசனம் இல்லாத படம் என்பதால் சவுண்ட் டிசைனுக்கும், பின்னணி இசைக்கும் படத்தில் முக்கிய பங்களிப்பு இருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் குறிப்பிட்டுள்ளார்.

#KarthikSubburaj #PrabhuDeva #Mercury #SanathReddy #DeepakParamesh #RamyaNambeesan #KamalHaasan #PesumPadam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பப்பர பப்பா வீடியோ பாடல் - லட்சுமி


;