7 வருடங்களுக்கு பிறகு பிரபு, முதல்முறையாக சூரி : இது ‘சாமி 2’ கூட்டணி!

விக்ரமின் ‘சாமி 2’ படத்தில் நடிப்பவர்கள், டெக்னீஷியன்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திகள் 20-Sep-2017 1:07 PM IST Chandru கருத்துக்கள்

‘ஸ்கெட்ச்’ படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்காக ஜார்ஜியா சென்றுள்ளார் விக்ரம். இந்த ஷெட்யூல் முடிவடைந்ததும் விரைவில் திருநெல்வேலியில் துவங்கவுள்ள ‘சாமி 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் விக்ரம். ஹரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள், டெக்ஷீனியன்கள் யார் என்ற விவரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்.

விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பதும், ஒளிப்பதிவிற்கு ப்ரியன், இசைக்கு தேவிஸ்ரீ பிரசாத் போன்ற விவரங்கள் ஏற்கெனவே வெளிவந்தன. அதனை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதோடு, இப்படத்தின் ஸ்டன்ட் வேலைகளை கனல் கண்ணன் கவனிப்பதாகவும், புரொடக்ஷன் டிசைனை மிலன் மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளனர். தவிர இப்படத்தில் பிரபுவும், சூரியும் நடிக்கிறார்கள் என்பதும் தற்போது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது.

2010ல் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘ராவணன்’ படத்திற்குப்பின் தற்போது மீண்டும் அவருடன் இணைந்துள்ளார் பிரபு. அதேபோல் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக காமெடியனாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் சூரி முதல்முறையாக விக்ரமுடன் ‘சாமி 2’வில் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Saamy2 #Vikram #Trisha #DeviSriPrasad #Soori #Prabhu #ChiyaanVikram #Hari #Singam3 #ShibuThameem

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96


;