பூஜையுடன் துவங்கியது விஷாலின் ‘சண்டக்கோழி-2’

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சண்டக்கோழி-2’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

செய்திகள் 20-Sep-2017 10:56 AM IST VRC கருத்துக்கள்

’லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீராஜாஸ்மின், ராஜ்கிரண் முதலானோர் நடித்து 2005-ல் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் ‘சண்டக்கோழி’. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து அது சம்பந்தமான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார் லிங்குசாமி. ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்க காலதாமதமானது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்திற்காக சென்னை பின்னி மில்லில் மிகப் பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. கோயில், மார்க்கெட் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த செட்டில் இன்று காலை ’சண்டைக்கோழி-2’வின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. விஷால், கீர்த்தி சுரேஷ் முதன் முதலாக இணைந்து நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது. விஷாலின் விஷால் ஃபிலிம்ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறவிருக்கிறது. ‘அஞ்சான்’ படத்தை தொடர்ந்து லிங்குசாமி இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

#Sandakozhi #Lingusamy #Vishal #Sandakozhi2 #Rajkiran #KeerthySuresh #ThirrupathiBrothers #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராட்சசன் ட்ரைலர்


;