‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் ‘இமைக்கா நொடிகள்’. அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்துவிட்ட இப்படத்தின் டப்பிங் வேலைகள் துவங்கி விட்டது. நயன்தாரா நடித்த பெரும்பாலான படங்களிலும் நயன்தாராவுக்காக டப்பிங் பேசியிருப்பது தீபா வெங்கட் தான்! அதைப் போல இப்படத்திற்கும் தீபாவெங்கட் தான் டப்பிங் பேசுகிறார். இப்படத்திற்காக தீபா வெங்கட் டப்பிங் பேசுவதுமாதிரியான ஒரு புகைப்படத்தை நேற்று வெளியிட்டிருந்தனர்.
கேமியோ ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் இந்த படத்தை டிசம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதில் அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க, புலனாய் அதிகாரியாக நடிக்கிறார் நயன்தாரா. பாலிவுட் பிரபலம் அனுராக் காஷ்யாப் வில்லனாக நடிக்கிரார். ஒரு கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார்.
#AtharvaaMurali #Nayanthara #ImaikkaNodigal #RajaRani #DeepaVenkat #AjayGnanamuthu #DemonteColony #CameoFilms #RashiKhanna #AnuragKashyap #VijaySethupathi
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து சென்ற வருட தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் ‘பிகில்’....