விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ டீஸர் குறித்த அறிவிப்பு!

விக்ரம், தமன்ன நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ டீஸர் குறித்த  அறிவிப்பு 22-ஆம் தேதி வெளியாகிறது!

செய்திகள் 19-Sep-2017 1:10 PM IST VRC கருத்துக்கள்

ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருந்த விக்ரம் கைவசம் இப்போது 3 படங்கள்! அதில் ஒன்றான விஜய் சந்தர் இயக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து இப்போது இறுதிகட்ட பணிகள் படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘துருவநட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு விக்ரம் இம்மாதம் 24-ஆம் தேதி சென்னை திரும்பவிருக்கிறார் என்றும், சென்னை வந்ததும் 25-ஆம் தேதி முதல் ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்கெட்ச்’சின் டீஸரை மிக விரைவில் வெளியிடவும் திட்டமிட்டுள்ள அப்படக் குழுவினர் இது குறித்த அறிவிப்பை வருகிற 22-ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதே நேரம் விக்ரமும், கௌதம் வாசுதேவ மேனனும் இணைந்துள்ள ‘துருவநட்சத்திரம்’ படத்தின் டிரைலரையும் மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம் கௌதம் வாசுதேவ் மேனன்!

#ChiyaanVikram #GauthamVasudevMenon #Saamy2 #DhruvaNatchathiram #Thaman #Sketch #Tamannah #VijayChander

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2


;