'தானா சேர்ந்த கூட்டம்' 4 முக்கிய தகவல்கள்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கலுக்கு வெளியாகிறது!

செய்திகள் 18-Sep-2017 10:15 AM IST VRC கருத்துக்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் முக்கிய பாத்திரங்களில் நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்று (செப்டம்பர்-18) விக்வேஷ் சிவன் பிறந்த நாள்! அவரது பிறந்த நாளையொட்டி ‘தானா சேர்ந்த கூட்டம்’ சம்பந்தமாக வெளியாகியுள்ள சில முக்கிய தகவல்கள் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தரும் என்பது நிச்சயம். சூர்யாவும், விக்னேஷ் சிவனும் முதன் முதலாக இணைந்துள்ள ‘தானா சேர்ந்த கூட்ட’த்தின் இரண்டாம் சிங்கிள் டிராக்கை அக்டோபர் மாதமும், டீஸரை நவம்பர் மாதமும், படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் டிரைலரை டிசம்பர் மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து படத்தை பொங்ல் பண்டிகை வெளியீடாக ஜனவரி 14-ஆம் தேதி திரைக்கு கொண்டு வரவும் முடிவு செய்திருக்கிறார்கள். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார்.

#ThaanaSernthaKoottam #TSK #Suriya #KeerthySuriya #StudioGreen #Anirudh #VigneshSivan #TSKreleaseDate

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடைக்குட்டி சிங்கம் - அடிவெள்ளக்கார வேலாயி வீடியோ பாடல்


;