மணிரத்னம், அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு பட அதிகாரபூர்வ அறிவிப்பு!

மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 16-Sep-2017 1:12 PM IST VRC கருத்துக்கள்

‘காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, ஃபஹத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் முதலானோர் நடிக்கவிருக்கிறார்கள் என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். இப்போது அந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் மணிரத்னம் அடுத்து இயக்கும் படம் மெட்ராஸ் டாக்கீஸின் 17-ஆவது தயாரிப்பு என்றும் அதில் மேற்குறிப்பிட்டவர்கள் நடிக்கவிருக்கிறார்கள் என்றும் இந்த படத்திற்கும் மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானே இசை அமைக்கவிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அத்துடன் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன், படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் பணியாற்றவிருப்பதையும் குறிப்பிட்டுள்ள படக்குழுவினர், மிகப் பிரம்மாண்டமான முறையில் இப்படம் உருவாகவிருக்கிறது என்றும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் துவங்கும் என்பதையும் தெரிவித்துள்ளார்கள்.

#Maniratnam #STR #VijaySethupathi #Arvindswamy #IshwaryaRajesh #Jyotika #ARRahman #SathoshSivan #SreekarPrasad

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சீதக்காதி ட்ரைலர்


;