சிவகார்த்திகேயன், கதிரை தொடர்ந்து விஜய்சேதுபதி!

‘ஆரண்யகாண்டம்’ குமாரராஜா அடுத்து இயக்கும் படத்திற்கு ‘சூப்பர் டீலக்ஸ்’   என்று பெயரிடப்பட்டுள்ளது!

செய்திகள் 12-Sep-2017 5:59 PM IST VRC கருத்துக்கள்

‘ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமார ராஜா அடுத்து இயக்கும் படத்திற்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஃபஹத் ஃபாசில் நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் இதில் அவர் திருநங்கையாக நடிக்கிறார் என்றும் தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் பெண் வேடத்தில் இருக்கும் விஜய்சேதுபதியின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இப்படத்தில் அவரது கேரக்டர் பெயர் ஷில்பா என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான ‘ரெமோ’வில் சிவகார்த்திகேயனும், விரைவில் வெளியாகவிருக்கும் ‘சிகை’ படத்தில் கதிரும் பெண் வேடம் போட்டு நடித்திருக்கும் நிலையில் இப்போது விஜய்சேதுபதியும் இந்த படத்தில் பெண் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஃபஹத் ஃபாசில், விஜய்சேதுபதியுடன் சமந்தா, நதியா, மிஷ்கின், காயத்ரி, பகவதி முதலானோரும் நடிக்கிறார்கள் என்ற தகவலுடன் இசைக்கு யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவுக்கு பி.எஸ்.வினோத், நீரவ்ஷா, படத்தொகுப்புக்கு சத்யராஜ் ஆகியோருடன் தியாகராஜன் குமாரராஜா கூட்டணி அமைத்திருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள். இந்த படத்தை Tyler "Durden"& Kino Fist நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளார்கள்.

#VijaySethupathi #AneethiKathaigal #SuperDeluxe #ThiagarajanKumararaja #YuvanShankarRaja #Samantha #Nadhiya #Mysskin #AaranyaKaandam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;