அரசியல் - ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!

எனக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை – ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!

செய்திகள் 12-Sep-2017 10:40 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் ராகவா லாரன்ஸ் சொல்லாத ஒரு விஷயத்தை செய்தியாக்கியதை தொடர்ந்து, அது சம்பந்தமாக அவர் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

‘‘சமீபத்தில் நான் ‘முனி-4’ படத்தின் பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்தேன். தரிசனம் முடித்து வரும்போது மீடியா நண்பர்கள் சிலர் படம் பற்றி கேட்டார்கள். சிலர் அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்கள். கோயில் திறந்து ஒரு மண்டலம் முடிந்தது பற்றி சொன்னேன். ‘நீட்’ விவகாரம் பற்றி கேட்டார்கள். நானும் காலம் பதில் சொல்லும் என்று ஒற்றை வரியில் பதில் சொன்னேன். ஆனால் வெளியிடப்பட்ட செய்தியில் பா.ஜ.கா.வுக்கு காலம் பதில் சொல்லும் என்று நான் சொன்னதாக வெளியிட்டுள்ளார்கள். சேவையும், ஆன்மீகமும் தான் எனக்கு பிடித்த விஷயம். அரசியல் அல்ல! அப்படி இருக்க நான் எப்படி பி.ஜே.பி.பெயரை குறிப்பிடுவேன். அனிதா குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி கொடுத்தீர்களா என்றும் கேட்டார்கள். அது கடவுளுக்கும், எனக்கும், அனிதா குடும்பத்திற்கும் மட்டும் தெரிந்தால் போதும்’ என்று சொன்னேன். தயவு செய்து என் பேச்சில் அரசியல் சேர்க்காதீர்கள்’’ இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்!

#RaghavaLawrance #TNPolitics #Kanchana3 #Muni4 #MottaSivaKettaSiva #Sivalinga

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;