மணிரத்னத்தின் மெகா கூட்டணியில் சிம்பு!

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார்!

செய்திகள் 11-Sep-2017 10:15 AM IST VRC கருத்துக்கள்

‘காற்றுவெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் தனது அடுத்த பட வேலைகளில் பிசியாகி விட்டார். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்திற்கான நடிகர், நடிகைகளின் தேர்வில் ஈடுபட்டுள்ளார் மணிரத்னம். ஏற்கெனவே ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் முதலானோரை தேர்வு செய்துள்ள நிலையில், இப்போது நடிகர் சிம்புவையும் தேர்வு செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகர்கள் இடம்பெறவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அரவிந்த்சாமி, ஃபஹத் ஃபாசில் முதலானோர் மணிரத்னத்தின் பரிசீலனனையில் இருந்து வரும் நிலையில் இப்போது சிம்புவை அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி கௌரவ வேடம் என்றில் நடிக்க இருக்கிறார் என்றும் அதில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் முதல் படமான இப்படத்தில் ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ள நிலையில், ஜோதிகாவுடன் சிம்பு நடிக்கும் மூன்றாவது படம் இது. ஏற்கெனவே ‘சரவணா’, ‘மன்மதன்’ ஆகிய படங்களில் சிம்பும், ஜோதிகாவும் இணைந்து நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்கும் இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும், இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன் ஆகியோர் கூட்டணி அமையவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது..

#STR #Maniratnam #VijaySethupathi #AishwaryaRajesh #Jyotika #FahadhFaasil #ARRahman #ArvindSwamy #SanthoshSivan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96


;