சூர்யா, கார்த்தியை தொடர்ந்து ஜோதிகா!

சூர்யா, கார்த்தியை தொடர்ந்து ஜோதிகாவும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார்!

செய்திகள் 9-Sep-2017 11:35 AM IST VRC கருத்துக்கள்

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளிவந்த படம் ‘36 வயதினிலே’. பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்தும் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா, நடிப்பில் இம்மாதம் 15-ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் ‘மகளிர் மட்டும்’. ‘குற்றம் கடிதல்’ படப் புகழ் பிரம்மா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இது. இந்த படம் தவிர பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் ஜோதிகா! இந்த படங்களை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் ஜோதிகா! இதனை சமீபத்தில் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ஜோதிகாவே குறிப்பிட்டுள்ளார். மணிரத்னம் தயாரித்த ‘டும் டும் டும்’ படத்தில் மாதவனுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஜோதிகா இதுவரையிலும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்ததில்லை! மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி முதலானோர் நடித்திருக்கிற நிலையில் இப்போது ஜோதிகாவும் இடம் பிடித்து விட்டார். ‘காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஃபஹத் ஃபாசில், விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் முதலானோரும் நடிக்கவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இது பற்றிய எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

#Maniratnam #VijaySethupathi #Nani #FahadhFaasil #Jyotika #AishwaryaRajesh #ARRahman #SanthoshSivan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கண்ணனின் லீலை வீடியோ பாடல் - வஞ்சகர் உலகம்


;