2017 இறுதியில் வேலைக்காரன்!

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ ரிலீஸ் டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது!

செய்திகள் 8-Sep-2017 10:46 AM IST VRC கருத்துக்கள்

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் முதலானோர் நடிக்கும் படம் ‘வேலைக்காரன்’. ‘24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்தை முதலில் விநாயக சதுர்த்திக்கு ரிலீஸ் செய்வதாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு வேலைகள் காலதாமதமானதை தொடர்ந்து வேலைக்காரனின் ரிலீஸை ஆயுதபூஜை விடுமுறையையொட்டி இம்மாதம் 29-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இப்போதும் ‘வேலைக்காரன்’ படத்தின் வேலைகள் முடிவுறாத நிலையில் படத்தின் ரிலீஸை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இதனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ள ‘வேலைக்காரன்’ படக்குழுவினர் அதற்கான காரணம் குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

‘வேலைக்கரன் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 2 பாடல்கள் படமாக்கப்பட வேண்டியுள்ளது. ‘தனி ஒருவன்’ வெற்றிக்கு பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் இது என்பதால் அனைத்து விஷயங்களும் தரமாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம். மேலும் புதிய முறையில் படத்தின் சென்சார் வேலைகளும் முடிவடைய மூன்று, நான்கு வாரங்கள் ஆகும் சூழ்நிலையும் இருப்பதால் இந்த மாத்ம் 29-ஆம் தேதி இந்த படத்தை வெளியிட முடியாது. இதற்காக அனைவரிடமும் வருத்தம் தெரிவிக்கிறோம். பெரிய பட்ஜெட்டில் தயாரகி வரும் படம் இது என்பதால் ஏதாவது ஒரு கொண்டாட்ட காலத்தில் வெளியிட்டால் மட்டுமே சரியாக இருக்கும். அக்டோபர் மாதம் பல படங்கள் வெளியாகவிருக்கிறது. நவம்பவரில் எந்தவொரு விழா கொண்டாட்டமும் இல்லை. ஆகையால் டிசம்பர் மாதத்தில் வரும் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ‘வேலைக்கார’னை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

#Velaikkaran #Sivakarthikeyan #Nayanthara #MohanRaja #Anirudh #24AMStudios #RDRaja #Sneha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யூ டர்ன் கர்மா தீம் - வீடியோ


;