அர்விந்த்சாமிக்குப் பதிலாக வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா?

‘போகன்’ தெலுங்கு ரீமேக்கில் அர்விந்த் சாமி நடித்த வில்லன் கேரக்டரில் நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை

செய்திகள் 6-Sep-2017 12:05 PM IST VRC கருத்துக்கள்

இப்போது முழுநேர நடிகராகிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. ‘இறைவி’ படத்தில் அவருக்குக் கிடைத்த வரவேற்பிற்குப் பிறகு இப்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் வில்லனான எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘ஸ்பைடர்’ படத்திலும் வில்லனானதன் மூலம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது பிஸியாக உள்ளார். இது தவிர, ‘மாயா’ அஸ்வின் சரவணன் இயக்கதில் உருவாகி வரும் ‘இரவாக்காலம்’ படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.

இந்நிலையில், தெலுங்கில் உருவாகவிருக்கும் ‘போகன்’ ரீமேக்கில் நடிக்கவும் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். தெலுங்கிலும் லக்ஷ்மணே இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் ரவிதேஜா நடிக்கிறார். அர்விந்த் சாமியின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே தற்போது எஸ்.ஜே.சூர்யா அழைக்கப்பட்டுள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#SJSuriya #Bogan #ArvindSwamy #Laxman #JayamRavi #Hansika #RaviTeja #RomeoJuliet

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அடங்கமறு Trailer


;