அமெரிக்காவில் ‘மெர்சல்’ படத்தை வெளியிடும் இரண்டு நிறுவனங்கள்!

‘மெர்சல்’ படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நிறுவனங்கள்!

செய்திகள் 4-Sep-2017 12:27 PM IST Chandru கருத்துக்கள்

ரஜினி, கமல் படங்களுக்குப் பிறகு வெளிநாடுகளில் பெரிய பிசினஸ் செய்பவை விஜய் படங்கள். அந்தவகையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து, வரும் தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் ‘மெர்சல்’ படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வெளிநாடுகளிலும் நிலவி வருகிறது. இதனால், ‘மெர்சல்’ படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை வாங்குவதில் கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில், இப்படத்தின் யுஎஸ்ஏ ரைட்ஸை அட்மஸ் நிறுவனம் வாங்கி உள்ளது. வழக்கமாக, தமிழ் படங்களை இந்நிறுவனம் அமெரிக்காவில் தங்களது சொந்த பேனரிலேயே வெளியிடுவார்கள். ஆனால், இம்முறை யுஎஸ் தமிழ் எல்எல்சியுடன் இணைந்து ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் ‘மெர்சல்’ படத்தின் தீம் மியூசிக், டீஸர் விரைவில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

#Vijay #Mersal #ARRahman #ATMUS #Atlee #NithyaMenen #Kajal #SJSurya #SriThenandalFilms #Samantha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திமிரு புடிச்சவன் - மோஷன் போஸ்டர்


;