விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ தெலுங்கு வெர்ஷனுக்கு கைகொடுக்கும் சிரஞ்சீவி!

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அண்ணாதுரை’ படத்தின் தெலுங்கு ஃபோஸ்டரை வெளியிடும் சிரஞ்சீவி!

செய்திகள் 4-Sep-2017 12:00 PM IST Chandru கருத்துக்கள்

‘எமன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது அண்ணாதுரை, காளி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. இதில், ராதிகா சரத்குமார் தயாரிப்பில் உருவாகும் அண்ணாதுரை படத்தை அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்குகிறார். படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட்புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அண்ணாதுரை படத்தில் விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு இசையமைப்பாளராக இருந்து நடிகரான விஜய் ஆண்டனி, இப்படத்தின் எடிட்டிங் வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறாராம்.

இது ஒருபுறமிருக்க, ‘அண்ணாதுரை’ படத்தின் தெலுங்கு வெர்ஷன் ‘இந்திரசேனா’வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாளை வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். விஜய்ஆண்டனி நடிப்பில் தமிழில் பெரிய வெற்றியைப் பெற்ற ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் தெலுங்கில் ‘பிச்சகாடு’ என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் பெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

#Megastar #Chiranjeevi #VijayAntony #Sena #Sarathkumar #RadhikaSarathkumar #AnnaDurai #Bichigaadu #Seenivasan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திமிரு புடிச்சவன் - மோஷன் போஸ்டர்


;